செவ்வாய், 21 ஜூலை, 2009

இம்போர்ட்டேனெட் msg

அசிடிட்டி வயிற்றில் சாதாரணமாகவே அமிலம் சுரக்கும். இவை உணவு செரித்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமிலம், செரித்தல் நிகழ்வின் போது உணவுப் பொருட்களை சிதைக்கப் பயன்படுகின்றன. வயிற்றில் அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது ஏற்படும் சூழ்நிலையே "அசிடிட்டி' எனப்படும். பொதுவாகவே வயிற்றில் சுரக்கும் அமிலத்திற்கும் குடலுக்கு வந்து சேரும் உணவுக்கும் இடையே ஒரு "ஒப்பந்தமே' உண்டு. கடினமான உணவு வகைகள் இருந்தால், அதை ஜீரணிக்க அதற்குத் தேவையான அமிலம் அதிகளவு சுரக்க வேண்டும்; மிருதுவான உணவுக்கு குறைந்த அளவு அமிலம். இந்த ஒப்பந்தத்தை மீறி, இரண்டுமே செயல்பட்டால் பிரச்னை தான்.
அறிகுறிகள்:

நெஞ்செரிச்சல்: வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

அஜீரணம்: வயிற்றின் மேல் பகுதியில் எரிவது அல்லது வலிப்பது போன்ற உணர்வு; சில நேரங்களில் குடல் பகுதியில் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். அரிதாக சிலருக்கு எவ்வித வலியும் இருக்காது. ஆனால், வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, வயிறு ஊதல் மற்றும் வயிற்றுப் பொருமல் போன்றவை ஏற்படும்.

அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபட உணவு முறையில் சிறியளவில் மாற்றம் செய்து கொண்டாலே போதும்.
சத்துள்ள பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். அப்போது உடலிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் முழு அளவில் கிடைக்கும்.

* பப்பாளி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் "புரோமிலெய்ன்' ஆகிய என்சைம்கள் அதிகளவில் உள்ளன. எனவே, இப்பழங்களை அதிகளவில் சாப்பிடலாம்.

* சீரகம், புதினா, சோம்பு ஆகியவற்றுக்கு, ஜீரண சக்தியை அதிகரித்தல், வாயு தொல்லை மற்றும் வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் தன்மை உண்டு. எனவே, இவற்றை தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது.
முட்டைகோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் எனும் அமினோ அமிலம் முட்டைகோசில் அதிகளவில் காணப்படுகிறது. முட்டைகோசு சாறை தனியே சாப்பிட முடியாவிட்டால் மற்ற காய்கறிகளின் சாறுடன் கலந்து சாப்பிடலாம்.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இஞ்சி டீ குடிக்கலாம்.

இவை செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி விடுகிறது.

உணவு உட்கொள்ளும் சரியான முறை:

* சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை வயிற்றில் உணவு செரித்தலுக்காக சுரக்கப்படும் அமிலங்களை நீர்த்துப் போக வைத்து விடும்.

* செரிமான அமைப்பிற்கு அதிக பளு ஏற்படுவதை தவிர்க்க, நாள் முழுவதும் முறையாகவும், சிறிது சிறிதாகவும் உணவை சாப்பிடலாம்.
தவிர்க்க வேண்டியவை:அசிடிட்டி உடையவர்கள், அமிலத்தன்மை நிறைந்தவைகளான சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* பொரித்த, பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இதை தவிர்க்க முடியவில்லை என்றால் வாரத்திற்கு 1-2 முறை சாப்பிடலாம்.

* அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் வயிற்றில் நீண்ட நேரம் தங்குவதோடு, செரிப்பதற்கும் கடினமாக இருக்கிறது. மேலும் அவை செரிமான அமைப்பிற்கும் அதிக பளுவை உண்டாக்குகிறது. எனவே, அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* காபின் நிறைந்த சாக்லேட் போன்ற உணவுப் பொருட்கள் இயற்கையிலேயே அமிலத் தன்மை நிறைந்தவை என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.

சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவதாலும் அசிடிட்டி உருவாகிறது. மனஅழுத்தத்தின் போது, அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது. இதனால் செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால், செரிமான நிகழ்வு குறைந்து, வயிற்றில் நீண்ட நேரம் உணவு தங்குவதால், அமிலம் பின்னோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது. எனவே, மனஅழுத்தத்தை எதிர்த்து சமாளிக்க, உடற்பயிற்சி, தளர்வாக இருத்தல் ஆகியவற்றை கடைபிடிக்கலாம்.

2 கருத்துகள்:

ANU சொன்னது…

Arampichidaru pa arampichaitaru..
nalla erukku anna
valthukal nan than first comment thanks hehehhehehe

kavitha சொன்னது…

அண்ணா கலக்குறீங்க புது பதிவுலயே