செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

காலைப்பனி


மேகங்கள் உதிர்க்கும்
பூப்பந்தலில்

மேலாடை உடுத்தும்

பச்சைசெடிகள்



காலைப்பனியில்

ஒன்றிணையும்

ஈரக்காற்றும்

பனிக்காற்றும்



சில்லென்ற சோலையில்

சிரித்துவிளையாடும்

பூங்கொடிகளோடு

கானம் பாடும் குயில்களும்



மலையினை மறைத்து

நிற்கும் தென்றல்

காற்றின் தமக்கை

இயற்கையன்னை

மடியில் உறங்கும்

பனிகாற்று!!

நாங்கல்லாம் வெட்டீஸ்

வர வர நிறைய பேர் என்னைய மாதிரியே சோம்பேறியாகிட்டு வராங்க. இந்த வினய் அண்ணா பேருக்கு ஒரு காமாட்சின்னு ஒரு ப்ளாக்கை ஆரம்பிச்சிட்டு எதுவும் எழுதாம அப்படியே வச்சிருக்காரு. இதுல நாலஞ்சு களவாணிங்க கூட்டு வேற. எல்லாரும் ஒவ்வொரு திசை. ஒழுங்கா சேர்ந்து எழுதுவாங்கன்னு பாத்தா ஒருத்தரும் உருப்படி இல்லை. ம்ஹ்ம் தலையே சரியில்லைன்னா வாலுங்க என்ன பண்ணனும் ஆளுக்கொரு பக்கம் சுத்திட்டு இருக்குங்க.ஒகே நாம எதையாச்சும் கிறுக்குவோம். ஆரம்பிச்சு வச்சு எதுவும் எழுதலைன்னா வேஸ்ட்டா தானே இருக்கும்.

எதாச்சும் எழுதரதுன்னா என்ன எழுத (((((((((((((())))))))))))))))) (யோசிக்கிறேன்)

ஒகே நம்ம கூட்டுல இருக்கர களவாணிகளை பத்தியே எழுதலாம்

முதல்ல கார்த்திகைக்கண்ணன்

கார்த்திகைக்கண்ணன் ஒரு நல்ல படிப்பாளி (?!) ரொம்ப அமைதியானவன். எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான் போல. போன்ல ஒரே ஒரு முறை பேசியிருக்கோம். முதல் முறை கூத்துப்பட்டறையில பாத்தப்போ ரொம்ப சைலண்ட் இருக்கர இடம் தெரியாது. ஃப்ரண்ட்ஸை பிடிச்சதும் ரொம்ப ஆட்டம்போட ஆரம்பிச்சிட்டார். இவரை பத்தி அதிகம் தெரியாததுனால இதுக்கு மேல ரீல் விடரது சரியில்லைன்னு நினைக்கிறேன். லிஸ்ட்ல இருக்கர அடுத்தவரை பாக்கலாம்

”விநாயகர்” வினய் :

இவர் பாக்கரதுக்கு நம்ம ஃப்ரண்ட் காட் விநாயகர் மாதிரியே இருப்பார். குட்டியா கத்தையான மீசை, தொப்பை வயிறு, விநாயகர் மாதிரி முகம். இவரோட இண்ட்ரோ இதுவரைக்கும் போதும் இதுக்கு மேல பேசினா தந்தத்தால அடிக்க வந்துடுவார்.
வினய் அண்ணா ரொம்ப நல்லவர். நல்லா வாய்கிழிய பேசலைன்னாலும் வால் தனம் அதிகம். எல்லாருக்கும் ஒவ்வொரு புனைபெயர் வைக்கிரதுல வில்லன் இவர். கூத்துப்பட்டரையில நண்பரா ஆனார். எல்லாரும் அரட்டை அடிக்கரதுக்கு முன்னாடியும் அரட்டையை முடிச்ச பிறகும் நிதானமா வருவார். எல்லாரும் அட்வைஸ் மழை பொழியரதுல ஹீரோ. இவர் வேலை செய்யரதை பாத்தா எறும்புகூட தூக்குபோட்டுக்கிட்டு செத்துடும். அவ்வளவு துடிதுடிப்பான உழைப்பாளி. ஆனா இவருக்கு கிடைச்சிருக்கர டேமேஜர் வெரி சூப்பர். இவருகிட்ட வேலை வாங்குர அவரை தெய்வம்னு தான் சொல்லனும்.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

இன்ஸ்டண்ட் தக்காளிசட்னி:


நிறைய வகை தக்காளிசட்னிகள் நம்ம தங்கமணிஸ் அவசர அவசரமா ரெடி பண்ராங்க. இருக்கர தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள், பெருங்காயம் இதான் எல்லா சமையலுக்கும் பேசிக் இன்கிரியடிண்ட்ஸ். இதை வச்சு எத்தனை டிசைன்ல வேணும்னாலும் நமக்கு ஏத்த டேஸ்ட்ல சமையல் செஞ்சுக்கலாம். அப்படி ஒரு வகையான சமையல் தான் இன்ஸ்டண்ட் தக்காளி சட்னி

தக்காளி - 2
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு - 5
கருவேப்பிலை
தேவைக்கு உப்பு
தாளிக்க எண்ணெய் கடுகு





















முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கருவேப்பிலைபோட்டு தாளிக்கவும். பிறகு பூண்டை இடித்து கடாயில் போட்டு வதக்கவும். பின் தக்காளியை சிறிது சிறிதாக வெட்டி கடாயில் போட்டு வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூளை சேர்க்கவும். அதனை நன்றாக வாசனை வரும் வரை வதக்கவும். பின்னர் உப்பு சேர்த்து இறக்கவும். சுவையான இன்ஸ்டண்ட் தக்காளி சட்னி ரெடி.

நாங்களும் சமையல் செய்வோம்ல!


சமையலா..... அவ்வ்வ்வ்வ்வ்...... அடுப்பு விறகு கிருஷ்ணாயில் வத்திபெட்டி இதையெல்லாம் வச்சு தானே சமையல் பண்ணனும்.

இதை எல்லாத்தையும் வச்சு தான் சமையல் பண்ணனும். இதுல எதாவது ஒன்னு சரியா வேலை செய்யலைன்னாகூட வெங்கயாத்துக்கு அக்காமாதிரி நம்மளை புகையால கண்ணு கசக்க வச்சுடும்.

எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க அடுப்பில பொறி சரியா இருந்தாதான், சட்டியில பொறி பொறிக்குமாம். அதோட சமையல்னா மூணு(உப்பு, காரம், புளிப்பு) முண்டையும் சரியா இருக்கனுமாம் இல்லைன்னா சமையலே வேஸ்ட்டுன்னு. பாட்டீஸ்ன்னாவே ஆயிரத்தெட்டு அன்பான அட்வைஸ்சஸ் சொல்லிட்டே இருப்பாங்க. அவங்க சொல்ரது அப்போதைக்கு அறுவையா இருந்தாலும் எல்லாம் நம்மோட நன்மைக்குத்தான் நமக்கு தெரியரதில்லை. அதானாலே பாட்டி சொல்லை எப்போதும் தட்டாதீங்க யூத்ஸ்.

ஒரு குட்டியான சமையல் சட்னி செய்யலாம். இது ஒரு ஆந்திரவகை காரச்சட்னி

காய்ந்த வரமிளகாய் - 10
தக்காளி - 1
பூண்டு - 10பல்
தேவைக்கு உப்பு
தாளிக்க எண்ணெய் கடுகு கருவேப்பிலை

முதலில் காய்ந்தவர மிளகாய், தக்காளி, பூண்டு, உப்பு இதையெல்லாத்தையும் மிக்ஸியில போட்டு நல்லா கண்மை அரைக்கிற மாதிரி அரைச்சிடுங்க. கடாயில எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை போட்டு அரைச்ச விழுதை போட்டு நல்லா கொதிக்க வைங்க. பச்சை வாசனை போய் பூண்டு வாசனை கமகமன்னு வர வரைக்கும் கொதிக்க வைச்சு இறக்கிடுங்க.













இதையே பச்சை மிளகாய், வெங்காயம் போட்டும் செய்யலாம். அவங்கவங்க டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி செஞ்சு சாப்பிட்டுக்கலாம்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தூக்கம்
















சிங்கமெல்லாம் இப்போ தூங்கிட்டு இருக்கு