ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

நாங்களும் சமையல் செய்வோம்ல!


சமையலா..... அவ்வ்வ்வ்வ்வ்...... அடுப்பு விறகு கிருஷ்ணாயில் வத்திபெட்டி இதையெல்லாம் வச்சு தானே சமையல் பண்ணனும்.

இதை எல்லாத்தையும் வச்சு தான் சமையல் பண்ணனும். இதுல எதாவது ஒன்னு சரியா வேலை செய்யலைன்னாகூட வெங்கயாத்துக்கு அக்காமாதிரி நம்மளை புகையால கண்ணு கசக்க வச்சுடும்.

எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க அடுப்பில பொறி சரியா இருந்தாதான், சட்டியில பொறி பொறிக்குமாம். அதோட சமையல்னா மூணு(உப்பு, காரம், புளிப்பு) முண்டையும் சரியா இருக்கனுமாம் இல்லைன்னா சமையலே வேஸ்ட்டுன்னு. பாட்டீஸ்ன்னாவே ஆயிரத்தெட்டு அன்பான அட்வைஸ்சஸ் சொல்லிட்டே இருப்பாங்க. அவங்க சொல்ரது அப்போதைக்கு அறுவையா இருந்தாலும் எல்லாம் நம்மோட நன்மைக்குத்தான் நமக்கு தெரியரதில்லை. அதானாலே பாட்டி சொல்லை எப்போதும் தட்டாதீங்க யூத்ஸ்.

ஒரு குட்டியான சமையல் சட்னி செய்யலாம். இது ஒரு ஆந்திரவகை காரச்சட்னி

காய்ந்த வரமிளகாய் - 10
தக்காளி - 1
பூண்டு - 10பல்
தேவைக்கு உப்பு
தாளிக்க எண்ணெய் கடுகு கருவேப்பிலை

முதலில் காய்ந்தவர மிளகாய், தக்காளி, பூண்டு, உப்பு இதையெல்லாத்தையும் மிக்ஸியில போட்டு நல்லா கண்மை அரைக்கிற மாதிரி அரைச்சிடுங்க. கடாயில எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை போட்டு அரைச்ச விழுதை போட்டு நல்லா கொதிக்க வைங்க. பச்சை வாசனை போய் பூண்டு வாசனை கமகமன்னு வர வரைக்கும் கொதிக்க வைச்சு இறக்கிடுங்க.













இதையே பச்சை மிளகாய், வெங்காயம் போட்டும் செய்யலாம். அவங்கவங்க டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி செஞ்சு சாப்பிட்டுக்கலாம்.

கருத்துகள் இல்லை: